கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 88,403 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,513,243 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 329,731 பேர் குணமடைந்தனர். மேலும் 48,078 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 17,669 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 139,422 ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,792 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148,220-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,736 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 430,210 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,895 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,097 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,733 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,274 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 411 பேர் குணமடைந்தனர். பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 10,869 அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,993 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் சீனாவில் 81,802 பேருக்கும், ஜெர்மனியில் 113,296 பேருக்கும், பிரான்சில் 112,950 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 542 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 541 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 747 பேர் உயிரிழந்துள்ளனர். பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 938 பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 738- ஆக அதிகரித்துள்ளது. மேலும் 21 பேர் குணமடைந்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *