பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் கொரோனா தொற்றால் மரணம்

பிரபல இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜிதேந்திரா ரத்தோட் (Jitendra Rathod) கொரோனா வைரஸ் தொற்றில் மரணமானார். கோவிட் -19 க்கான பரிசோதனையில் கொரோனோ தொற்றுக்கு உட்பட்டமை உறுதிசெய்யப்பட்டதனை அடத்து, கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய ஜிதேந்திரா ரத்தோட் (Jitendra Rathod) கார்டிஃப் வேல்ஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் திங்கள்கிழமை காலமானதாக வேல்ஸ் சுகாதாரப் பிரிவு உறுதிப்படுத்தியது.

இந்தியாவின் மும்பை பல்கலைக்கழகத்தில் 1977 ல் மருத்துவத்துறையில் பயின்ற ஜிதேந்திரா ரத்தோட் (Jitendra Rathod) பின்னர் பிரிதானியாவுக்கு சென்று 4 வருடங்கள் சுகாதாரத்துறையில் பணியாற்றினார். சிறிதுகாலம் பிரித்தானியாவுக்கு வெளியில் UHWவ்ல் பணியாற்றிய அவர் 1990களின் நடுப் பகுதியில் இருந்து கார்டிஃப் மற்றும் வேல்ஸ் பல்கலைக்கழக கார்டியோ-தொரசிக் அறுவை சிகிச்சை பிரிவில் (Department of cardio-thoracic surgery) பணியாற்றினார்.

அவர் மிகச் சிறந்த அர்ப்பணிப்புள்ள அறுவை சிகிச்சை நிபுணர், அவர் தனது நோயாளிகளை மிகவும் கவனித்துக்கொண்டவர்,” அவர் அனைவராலும் நன்கு விரும்பப்பட்டவர், அனைவராலும் பெரிதும் மதிக்கப்பட்டார், மிகவும் இரக்கமுள்ளவர், அற்புதமான மனிதர். அவரது சிறந்த அர்ப்பணிப்பு முன்மாதிரியாக இருந்தது. நாங்கள் அவரை பெரிதும் இழப்போம்.” என வேல்ஸின் சுகாதாரத் துறைதெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *