மரண பீதியில் வாழும் அமெரிக்கா மக்கள்

கொத்துக் கொத்தாக அமெரிக்காவில் மரணம்.. நேற்று மட்டும் ஒரே நாளில் 1255 நபர்கள் மரணம்.
நேற்றைய நாளில் புதிதாக கொரோனா நோயால் புதிதாக பிடிக்கப்பட்டவர்கள் மட்டும் 30.000..பேர்கள்
இன்றைய அமெரிக்க தலைமுறை மக்கள்,  அமெரிக்கா அல்லாத வெளிநாட்டில் அமெரிக்கர்களால் கொல்லப்படும் செய்தியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்துப்பார்கள். முதல்முறையாக அமெரிக்கர்களின் கண்னிரையும், கதறலையும் பார்க்கிறார்கள்..
ஒவ்வொரு முறையும் பிற நாடுகளில் கொத்து கொத்தாக கொலை செய்து விட்டு, அன்றைய தினம் மகிழ்ச்சியோடு உறங்கிய மக்களுக்கு, தன்னால் அழிக்கப்படும் இடங்கள் என்னவெல்லாம் வேதனைப்படும் என்பதை முதல்முறையாக தன் சொந்த நாட்டிலே பார்க்கிறார்கள்.

கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்ப்பட்ட மரணத்தை விட, அமெரிக்கர்களால் இந்த உலகத்தில் இறந்து போன பொதுமக்கள்தான் அதிகம்..
ஈராக், ஈரான், மியான்மர், வியட்நாம், கியூபா, மெக்சிக்கோ, வெனிசுலா, லெபனான், பாலஸ்தினம், வட கொரியா இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நாடுகளுக்கு எல்லாம் மருத்துவத்தடை விதித்த நாடு அமெரிக்கா..

அதாவது மருத்துவத்தடை என்றால், எந்த நாட்டு மருத்துவர்களும் இந்த நாட்டு மக்களுக்கு மருத்துவம் செய்யக் கூடாது. மேலும் இந்த நாடுகளுக்கெல்லாம் மருந்து பொருட்கள் கொடுக்கக்கூடாது. மருத்துவம் சம்பந்தமான எந்த சிறு உபகரணங்கள் கூட கொடுக்கக் கூடாது என்றே தடை. எத்தனை பெரிய கொடுரமான தடை என்று நீங்கள் உணருங்கள்.
அதன் கொடுரத்தை இன்று அமெரிக்காவே உணர்ந்துள்ளது. மருந்து பொருட்கள் பற்றாக்குறையால் இந்தியாவிடமும் கையேந்தி விட்டது..  சீனாவிடம் கையேந்தி விட்டது.. மருந்து பொருட்கள் தடையால் பிற நாடுகள் எவ்வளவு பாதிக்கப்பட்டுருக்கும் என்பதை தன் பாதிப்பில் பாடம் கற்றுக் வருகிறது..
சிரியாவில் இன்று அமெரிக்கப் படை நடத்திய தாக்குதலில் 2000 பேர் மரணம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய அதிரடி தாக்குதலில் குறைந்தது 3000 கொல்லப்பட்டனர் என்ற செய்தியை நாம் பார்த்துருக்கிறோம். அதை ரசித்து விட்டு அமெரிக்கர்களும் கடந்துருப்பார்கள்..

ஆனால் இன்று உலக மக்கள் யாரும் அமெரிக்காவின் மரணத்தை ரசிக்கவில்லை. மாறாக அனைத்துலக மக்களும் அமெரிக்காவிற்காகவும் பிரார்த்தனை செய்கிறார்கள்
உலகம் இதற்கு முன், இதுபோன்ற ஒரு பாதிப்பை சந்தித்த பொழுது தான், அதை தனக்கு சாதகமாக்கி அமெரிக்கா வல்லரசானது. பிறர் பாதிப்பில் தான் நாம் வல்லமை பெற முடியும் என்று நினைத்த அமெரிக்கா. வல்லமை அடைந்தது. வல்லரசும் ஆனது..

நம்மை போல் பிறர் நம் மீது வல்லமை செலுத்த நினைப்பார்களே என்று யோசிக்கவில்லை. இன்று உலக பாதிப்பு என்பதை விட, அமெரிக்காவின் பாதிப்பில் தான் சீனா வல்லரசாக வலம் வரப் போகிறது..
சீனா 89 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்புக்கான மருந்தை தர வியாபார ஒப்பந்தம் செய்துள்ளது.. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அமெரிக்கா சத்தமில்லாமல் பினங்களை பொதைத்து வருகிறது.

மிக எளிதாக கொலை செய்து விட்டு சென்று விடும் அமெரிக்கர்களுக்கு, இறந்த பிணங்களை எவ்வளவு சிரமத்தோடுதான் அப்புறப் படுத்துவார்கள் என்பதை தற்போது தான் தெரிந்து கொண்டு வருகிறார்கள்..
மரண ஓலத்தில் மகிழ்ச்சி கண்ட மக்களின் மரண ஒலத்தில் நிச்சியம் நமக்கு மகிழ்ச்சி காண அமெரிக்கர் போல் நமக்கு மனம் இல்லை.
அனைத்து மக்களும் அமெரிக்க மக்கள் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *