கொரோனா வைரஸை பரப்பிய சீனாவுக்கு கடும் அபராதம் !சர்வதேச நீதிபதிகள் கவுன்சில்

கொரோனா வைரசை பரப்பி மனித குலத்திற்கு எதிராக பயங்கரமான குற்றம்புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும்,’ என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து லண்டனை மையமாக கொண்ட சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா தனது அறிக்கையில் கூறியதாவது:

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீன அரசின் செயலற்ற தன்மையால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதித்தும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.

கோடிக்கணக்கான பண இழப்பும்,  பல நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவாத இந்த வைரஸ், உலகில் அனைத்து நாடுகளுக்கு மட்டும் பரவுவது மட்டும் இன்னும் மர்மமாகவே உள்ளது.

உலகம் முழுவதும் 69 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த வைரஸ் பரவ, சீன ராணுவமும் வுகான் நகரமும்தான் காரணம். எனவே, இந்த விஷயத்தில் ஐநா மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும். ஒட்டு மொத்த உலகுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் இழப்பீடு தொகையை சீனா செலுத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட வேண்டும்.

உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை நிலைநிறுத்தவும், ‘பயோவார்’ எனப்படும் உயிரி போர் மூலம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தவும் நினைக்கும் சீனா, கொரோனா ஒரு தொற்றுநோய் அல்ல என ஆரம்பகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தையே தவறாக வழிநடத்தி உள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தையும், இதர உலக நாடுகளையும் எச்சரிப்பததில் சீன அரசும் அதன் அதிகாரிகளும் தோல்வி அடைந்துள்ளனர். இதில் அனைத்து சட்ட விதிகளையும் மீறிய சீனா வெளிப்படையாக தகவல்களை வெளியிடாமல் மனித உரிமையை மீறி உள்ளது.

மனித குலத்துக்கு எதிராக மிகப்பெரிய பயங்கர குற்றத்தை இழைத்துள்ளது. இதற்காக உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 25(1)வது பிரிவின் கீழ் சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்
பாகிஸ்தான் எம்பி ரஹ்மான் மாலிக், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘கொரோனா வைரஸ் இயற்கையிலே உருவானதா? அல்லது பயோலாஜிக்கல் போர் போன்று மனிதனால் உருவாக்கப்பட்டதா?, அதன் பிறப்பிடம் எது என்பது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *