பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா கொவிட் என பெயர் வைத்த தம்பதியினர்

“பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ஆண் குழந்தைக்கு கொவிட், பெண் குழந்தைக்கு கொரோனா என பெயர் வைத்த இந்திய தம்பதி.
கொரோனா என்பது முழு உலகையும் பீதிக்குட்படுத்தியுள்ளது.
எனினும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கொரோனா ஊரடங்கு  காலத்தில் பிறந்த தமது இரட்டைக் குழந்தைகளுக்கு கொரோனா எனவும் கொவிட் எனவும் பெயரிட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ராய்பூர் நகரில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு ராய்பூர் நகர வைத்தியசாலையொன்றில் மார்ச் 27 திகதி அதிகாலை, ராய்பூர் நகர வைத்திசாலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
அவற்றில் ஒன்று ஆண் மற்றையது பெண் குழந்தையாகும்.

இக்குழந்தைகளில் ஆண் குழந்தைக்கு கொவிட் எனவும் பெண் குழந்தைக்கு கொரோனா எனவும் தாம் பெயரிட்டுள்ளதாக இக்குழந்தைகளின் தாயாரான ப்ரீத்தி வேர்மா எனும் 27 வயதான பெண் தெரிவித்துள்ளார்.
பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட பின்னர் இப்பிரசவம் நடந்தது. அதனால், இத்தினம் நினைவுபடுத்தப்பட வேண்டியது என நாம் விரும்பினோம்.

நான் பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு ஆம்பியூலன்ஸ் மூலமே சென்றேன். பல இடங்களில் நாம் பொலிஸாரினால் நிறுத்தி விசாரிக்கப்பட்டோம்.

வைத்தியசாலை உத்தியோத்தர்களும் இக்குழந்தைகளை கொரோனா மற்றும் கொவிட் என அழைக்க ஆரம்பித்தபோது, அப்பெயர்களையே குழந்தைகளுக்கு சூட்டுவது என நாம் தீர்மானித்தோம்.
உண்மையில் கொரோனா வைரஸ் அபாயகரமானது. ஆனால், இப்பரவலானது மத்தியில் சுகாதாரம், சுத்தம் முதலான சிறந்த பழக்கவழக்கங்கள் குறித்த கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது என ப்ரீத்தி வேர்மா தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *