பேசுவதன் மூலமும் கொரோனா வைரஸ் பரவலாம்!

அமெரிக்காவில் நடத்திய ஆய்வுகளின் முடிவில் கொரோனா நோயாளிகள் பேசும்போதும் மூச்சுவிடும் போதும் பரவலாம் என அறிவித்துள்ளனர்.

உலகெங்கும் இதுவரை 11 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 60000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். வேகமாகப் பரவி வரும் இந்த வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தொட்டு பழகும்போதும், அவர்களின் உமிழ்நீர் மூலமும் மட்டுமே பரவும் எனவும் காற்றின் மூலம் பரவாது எனவும் முதலில் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் வெளியான சில ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க சுகாதார நிறுவனம் செய்த ஆய்வுகளில் ‘கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் மட்டுமல்ல அவர்கள் பேசும்போதும், அவர்கள் விடும் மூச்சுக்காற்று மூலம்கூட காற்றில் பரவக்கூடும் எனத் தெரியவந்துள்ளது. அதனால் முகக்கவசம் அணிவது தொடர்பான அறிவுரைகளில் மாற்றமாக எல்லோரும் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது மக்களை மேலும் பீதி கொள்ள செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *