கொரோனா வைரஸால் வேலைகள் இழப்பால் உலகப் பொருளாதாரம் கேள்விக்குறி?

- கடந்த பத்தாண்டுகளாக வளர்ச்சி முகத்தில் அமெரிக்காவிலிருந்த வேலைவாய்ப்புகள் மார்ச் மாதத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குத் தடைப்பட்டு இருக்கிறது.
- கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 701, 000 பேர் அமெரிக்காவில் வேலைவாய்ப்பை இழந்து இருக்கிறார்கள்.
- இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் சுமார் 11 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- 58,900 பேர் உயிரிழந்துள்ளனர். 2,14,459 பேர் குணமடைந்துள்ளனர்.
- நாம் கணிப்பதைவிட பொருளாதார நிலைமை மேலும் மோசமாகும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.