கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59000ஐ தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,140 பேர்  கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,097,810 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 228,405 பேர் குணமடைந்தனர். மேலும் 39,439 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 14,681 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 119,827- ஆக உயர்ந்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 11,198 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 119,199-ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக 7,134 பேருக்கு கொரோனா உறுதி  செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,391 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 276,965 -ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 1,320 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2547 ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 62 ஆக  அதிகரித்துள்ளது.  பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,507 அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஈரானில் 3,294 பேர்  உயிரிழந்துள்ளனர்.

மேலும் சீனாவில் 81,620 பேருக்கும், ஜெர்மனியில் 91,159 பேருக்கும், பிரான்சில் 64,338 பேருக்கு கொரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இத்தாலியில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 766 உயிரிழந்துள்ளனர். பிரான்சில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,120 உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,320 உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 850 உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411- ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 1 ஆக  உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *