கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் அதிகரிக்கும் வேலையிழப்புகள்

அண்மையில் உலகளவில் உருவாகியிருந்த பொருளாதார மந்த நிலை பல நாடுகளுக்குப் பரவியிருந்த நிலையில், பெரும் பொருளாதாரச் சீர்குலைவையே உருவாக்கியிருக்கிறது கொரோனா.
உலகளவில் சுமார் நூறு நாடுகள் ஊரடங்கைப் பிறப்பித்திருக்கின்றன. இதனால் அந்த நாடுகளின் பொருளாரமும் முடங்கிப் போயிருக்கிறது.

இதன் இன்னொரு விளைவாக, உலகப் பொருளாதார வளர்ச்சியே 0.9 சதவிகித அளவுக்குக் குறைய வாய்ப்பிருப்பதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

பெரும் வல்லரசாகச் சொல்லப்பட்ட அமெரிக்காவில் நோய்த்தொற்று காரணமாக ஊரங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதனால் பல நிறுவனங்கள் செயலிழந்து மூடப்பட்டிருக்கின்றன. பலர் வேலை இழந்திருக்கிறார்கள்.
அமெரிக்காவில் மட்டும் 66.5 லட்சம் பேர் வேலையிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஒரு மாதத்தில் மட்டுமே 3.2 லட்சம் பேர் வேலையை இழந்திருக்கிறார்கள்.

இவை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே.

கொரோனா பரவல் எல்லாம் அடங்கி நிதானத்திற்கு உலக நாடுகள் திரும்பிய பிறகே உண்மையில் வேலைவாய்ப்பின்மை எந்த அளவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிற எண்ணிக்கை வெளிப்பட்டு, உலக நாடுகளை அதிரவைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *