உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55ஆயிரத்தை தாண்டியது

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்தது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 55,163 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 10.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2.20 லட்சம் பேர் குணமடைந்தனர். சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 195-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
- ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 134 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,183 பேர். 3,294 பேர் பலியாகி உள்ளனர். 17,935 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர்.
* ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 950 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதால், சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. பலி எண்ணிக்கையில், இத்தாலிக்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதுபோல், இத்தாலியில், பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
- அமெரிக்காவில் 245,442 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,099 பேர் பலியாகியுள்ளனர்.
- இத்தாலியில் 115,242 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13,915 பேர் பலியாகியுள்ளனர்.
- இந்தியாவில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,301-ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது….