கொரோனா சூடான அடுப்பில் சுவாசிப்பது போல் இருந்தது பாதிக்கப்பட்ட பெண்ணின் அனுபவம்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டது குறித்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 17-ஆம் திகதி அது என்னை தாக்கியது என்று நினைப்பதாக சுவிட்சர்லாந்தை சேர்ந்த Alexandra Moreno என்ற 32 வயது பெண் கூறுகிறார்.

நான் சக ஊழியருடன் போனில் பேசிக் கொண்டிருந்த போது, திடீரென்று இருமல் துவங்கியது. நான் நல்ல உடல்நலத்துடனே இருந்தேன். அதன் பின் தலைவலி மற்றும் இருமல் காரணமாக தனது வீட்டு அலுவலகத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றுவதை சாத்தியமாக்கியது

அப்படி இருந்த போது, மிகவும் சோர்வை அடைந்தார். தூங்க முயன்றுள்ளார். ஆனால் சுமார் 40 நிமிடங்கள் கழித்து காய்ச்சலின் அறிகுறி இருந்தது. வியர்வை வந்ததுடன், அவளுக்கு மூச்சுத் திணறல் இருந்துள்ளது. சுவாசிக்க கடினமாக இருந்துள்ளது.

இதனால், இறுதியாக, கொரோனா வைரஸிற்கு அவசர சிகிச்சை எண்ணை அழைத்துள்ளார். அப்போது அவரின் வயது நோயின் வேகம் பற்றி பல்வேறு செவிலியர்களுடன் பேசியதால், எரிச்சலடைந்துள்ளார். அதன் பின் கடைசியாக Lausanne-ல் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு வரும்படி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து டாக்சி ஒன்றில் சென்ற அவர் கொரோனா வைரஸிற்கான மையத்தை அடைந்துள்ளார். அங்கு, அவரது வயது மற்றும் முந்தைய நோய்களின் பற்றாக்குறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அவர் ஆபத்தில்லாத ஒரு நபராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதனால் அவர் சோதிக்கப்படவில்லை, இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். தனது வெப்பநிலை மற்றும் இரத்த அழுத்தத்தை அளவிட வேண்டும் என்று அங்கிருந்த மருத்துவர்கள் மற்று செவிலியர்களிடம் வலியுறுத்தியுள்ளார். அது காய்ச்சல் போல இருக்கும், சில நாட்களில் சரியாகி விடும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

அடுத்த நாள் காலையில் நன்றாக எழுந்த அவருக்கு, நுரையீரல் எரிவது போன்று, இது ஒரு சூடான அடுப்பில் சுவாசிப்பது போல் இருந்துள்ளது.

இதயம் வலித்ததால், மாரடைப்பு வரப்போகிறது என்று நினைத்து, ஜன்னல்களை திறந்துள்ளாள். அதன் பின் மீண்டும் கொரோனா வைரசின் அவசர சிகிச்சை எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் எந்த பலனும் கிடைக்காத நிலையில், டாக்சியில் அங்கு சென்றுள்ளார்.

அங்கு குறித்த மையம் அடைக்கப்பட்டிருப்பதை கண்ட இவர், தன்னுடைய மருத்துவரிடம் சென்றுள்ளார். அந்த மருத்துவர் குறித்த மருந்து ஒன்றை பரிந்துரை செய்ய, மருந்தும் வேலை செய்தது. சில நாட்களுக்கு பின் அதை சாப்பிடுவதை நிறுத்தியதால், அவரின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதனால் மார்ச் 26-ஆம் திகதி அன்று(10 நாள் போராட்டம்) அவரின் இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.அதில் அவருக்கு நேர்மறையான சோதனை முடிவை காட்டியுள்ளது. அதே சமயம் உடலில் வைரஸின் அளவு ஏற்கனவே குறைந்து வருவதையும் காட்டியுள்ளது.

தற்போது அதில் இருந்து குணமடைந்துள்ள இவர், சாதரண காய்ச்சல் என்று நாம் நினைப்பதை நிறுத்த வேண்டும், நான் என்ன செய்தேன், எனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை சொல்ல விரும்பினேன், இது அனைவரையும் பாதிக்கும், சாதரண காய்ச்சல் என்று நினைப்பதை நாம் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *