உலக அளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47000ஐ தாண்டியது

உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனா வைரசுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் சுமார் 5,000 பேர் பலியாகினர். இதில், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பலியானவர்கள் மட்டும் பாதிக்கும் மேற்பட்டோர் ஆவர்.

இதன் மூலம் உலக அளவில் கொரோனா வைரசுக்குப் பலியானோர் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 47,222பேரை கொரோனா வைரஸ் பலியாக்கியிருக்கிறது. அதே போல் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 35 ஆயிரத்து 581 ஆக உயர்வடைந்துள்ளது.

194,260 பேர் குணமடைந்துள்ளனர்.

694,099 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இவர்களில் 35,478 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இத்தாலியில் மட்டும் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 110,574 கடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானார்கள். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,102- ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *