இலங்கையில் ஒரே நாளில் அதிகரித்த கொரோனா வைரஸ்

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 10 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 10 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இன்று (31) பிற்பகல் 4.15 மணி வரையான காலப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
தற்போது, நாட்டில் 142 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அத்துடன், இன்றைய தினம் மாத்திரம் இதுவரை 20 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.