பொருளாதாரத்தை எப்படி சமாளிப்பது என்ற அழுத்தம் காரணமாக ஜேர்மன் அமைச்சர் தற்கொலை

கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், அதை எப்படி சமாளிப்பது என்ற மன அழுத்தம் காரணமாக ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநில நிதி மந்திரி தற்கொலை செய்து கொண்டார்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவருகின்றது.
அதிலும் குறிப்பாக இத்தாலி ஈரான் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளை பெரிதும் பாதித்துள்ளது.
உலகளவில் தற்போது பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்சி மாநிலத்தின் நிதி மந்திரி் தாமஸ் ஸ்கிபெர் கடந்த சில நாட்களாக இந்த சிக்கலை போக்க உழைத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் பொருளாதாரம் படும் வீழ்ச்சியடைந்துள்ளதால் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று அவரது உடல் ரெயில் தண்டவாளம் அருகில் கண்டெடுக்கப்பட்டது.

‘‘தாமஸ் ஸ்கிபெர் உயிரிழந்தது எங்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. எங்களால் இதை நம்ப முடியவில்லை. நாங்கள் மிகவும் சோகமாக இருக்கிறோம். பொருளாதாரம் குறித்து அவர் மிகவும் கவலை அடைந்தார் என்பதை இன்று எங்களால் ஊகிக்க முடிகிறது. தற்போது இக்கட்டான நிலை. இந்த நேரத்தில் அவரை போன்ற ஒருவர் எங்களுக்கு தேவைப்பட்டிருப்பார்’’ என மாநில முதல்வர் வால்கர் பவ்ஃபியர் தெரிவித்துள்ளார்.
தாமஸ் ஸ்கிபெர் கடந்த 10 ஆண்டுகளாக நிதி மந்திரியாக இருந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *