கொரோனா வைரஸ் தாக்குதலால் பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு?

பிரிட்டனில் ஆறு மாதங்கள்
ஊரடங்கு உத்தரவு
பிரிட்டனில் ஆறு மாதங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனா தாக்கத்தை விரைவில் கட்டுப்படுத்தலாமென பிரதமர் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை பற்றி தற்போது விவாதிப்பது தேவையற்றது என போரிஸ் அரசு கருதுகிறது. பெரும்பாலான உலக அரசியல் தலைவர்களின் கருத்து இதுவாகவே உள்ளது. ஆனால் இவ்வளவு நீண்ட காலம் ஊரடங்கு கடைபிடித்து அனைவருக்கும் உணவு, அத்தியாவசிய பொருட்கள் அளிப்பது சாத்தியமா என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் தன் வளங்களை வாரி கொடுக்க பிரிட்டன் தயாராகவே உள்ளது.
இதேபோல ஆஸி.,யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் ஆஸ்திரேலியர்கள் தவிர வெளிநாட்டவர்களுக்கு விமானம் மூலம் ஆஸி வர கட்டாயத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் ஆஸ்திரேலியர்கள் நாட்டுக்குள் நுழைந்து 14 நாட்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர். பின்னர் அவர்களுக்கு கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் தங்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கக்கப்படுவர்.இதனை 6 மாதங்களுக்கு கட்டாயமாகக் கடைபிடிக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.