கொரோனா அச்சத்தில் வெளிநாட்டு மாப்பிள்ளையை ஒதுக்கும் யாழ்.பெண்கள்

யாழ்ப்பாணத்தில் பல பெண்கள் வெளிநாட்டு மாப்பிளைகளை திருமணம் செய்வதனை இலட்சியமாக கொண்டிருக்கின்றனர் என்பது அனவரும் அறிந்ததே!
சில பெண்கள் சிறுவயது முதல் இதற்காக அழகு நிலையங்கள் ஆங்கிலம் சமையல் கேக் ஐசிங் என தயாராகி நண்பர்களால் ”வெளிநாட்டு பாசல்” என கிண்டலடிக்கப்படுவதை கண்டிருப்பீர்கள்.
காரணம் வெளிநாடுகளில் காணப்படும் ஆடம்பர வாழ்க்கை முறை என எண்ணி அங்கு செல்வதற்கு திருமணத்தினை பயன்படுத்திக்கொள்ள முடிவதாகும்.
சீதணம் என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் நிலம் உள்நாட்டு மருமகனுக்கு கொடுப்பதை போல வெளிநாட்டு மாப்பிளைகள் நிலம் கேட்பது குறைவு என்பதால் பெற்றோர்களுக்கு தம் பிள்ளைகளுக்காக சொத்து சேர்க்கும் வேலை மிச்சம்.
வெளிநாட்டு காசு
ஓய்வு காலத்தில் பெற்றோர்களுக்கு மாதாந்த செலவு, உறவினர்களுக்கு இலத்திரனியல் பரிசு பொருட்கள், நகைகள் ஆடைகள் என வெளிநாட்டிலிருந்து இங்குள்ளவர்களுக்கு வந்து கொண்டிருப்பதால் திருமணத்தை பயன்படுத்தி தங்கள் பிள்ளைகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு இந்த வசதிகளை அனுபவிக்க நினைப்பது போன்ற காரணங்களால் வெளிநாட்டு மாப்பிளைகள் இலகுவில் அழகான பெண்களை திருமணம் செய்து வந்தார்கள்.
யாழ்ப்பாணத்திலிருந்து தன் கல்வியை தொடர முடியாமல் சொத்துக்களை அடமானம் வைத்து கடன் வாங்கி அந்த பணத்தில் களவாக வெளிநாடு செல்லும் ஒரு இளைஞன் வெளிநாட்டில் அகதியாகி தஞ்சம் கோரி தட்டு கழுவுதல், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், உணவகங்கள், கழிப்பறை சுத்தம் செய்தல், கடைகளில் எடுபிடி என வேலை செய்ய ஆரம்பித்து அந்த நாட்டு குடியுரிமைகிடைத்தால் நல்ல வேலைக்கு சிலர் சென்று விடுவார்கள்.
கிடைக்காவிட்டால் அதே அடிமை வேலைகளில் தொடரவேண்டும். இலங்கைக்கு வரமுடியாது. இந்தியாவிற்கு மணமகளை வரவைத்து தானும் அங்கு வந்து திருமணத்தினை நடத்தி அதன் பின்னரும் பல கால போராட்டங்களின் பின்னர் மணமகளை வெளிநாட்டுக்கு செல்ல ஏற்பாடு செய்கின்றனர்.
வயது மற்றும் வெளிநாட்டு மோகம் காரணமாக மணமகனுக்கு அதிக வயதானாலும் பரவாயில்லை என திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் வெளிநாடு சென்ற சில காலங்களின் பின்னர் தான் அந்த நாட்டின் இயந்திர வாழ்க்கை பற்றி உணர தொடங்குகின்றனர்.
நாட்டிற்கு திரும்பினால் கேலிக்கு ஆளாவோம், பெற்றோர்கள் மனமுடைந்து போய்விடுவார்கள் இதுவே விதி என அந்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள பழகி விடுகின்றனர்.
ஊருக்கு வரும் போது வீட்டு கடன் வாகன கடன் மருத்துவ கடன் எதையும் காட்டிக்கொள்ளாமல் கடனட்டையில் பணம் செலவளித்து தாம் வசதியாக தான் வாழ்கிறோம் முன்பு ஊரில் இருந்தது போல இல்லை என காண்பிக்க பகட்டாக காட்டிக்கொள்கின்றனர்.
தகுதியுடன் வெளிநாடு செல்லும் தொழில் சார் நிபுணர்களின் வாழ்க்கை முறை அந்நாட்டு வெள்ளையர்களின் வாழ்க்கை முறைக்கு நிகரானது.
இந்த நிலையில் அனைத்து வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கொரோனா வைரஸ் காரணமாக கொத்துக்கொத்தாக கொலைவிழுந்து கொண்டிருப்பதால் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பலர் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர்.
இதற்கான காரணமாக பல மக்கள் வந்து போகும் இடங்களில் இவர்கள் பணிபுரியவேண்டி இருப்பதானாலேயே ஆகும்.
இதில் பலர் யாழ்ப்பாணத்திலுள்ள பெண்களை திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தவர்கள்.
இந்த நிலையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்களின் மரணங்களை செய்திகள் ஊடாக அறியும் மணமகள்களின் பெற்றொர்கள் இந்த நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை நிறுத்தி வருகின்றனர். corona jaffna wedding
அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் நிற்சயிக்கப்பட்ட நாளுக்கு 4 நாட்கள் முன்னதாக அழைப்பிதழ் கொடுத்து பந்தல் போட்டு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டபின் நிறுத்தப்பட்டது. இதற்காக வைரஸ் இலங்கைக்கு வர முன்னரே மணமகன் இலங்கை வந்து காத்திருந்துள்ளார்.
எங்கள் மகள் வசதியாக வாழாவிட்டாலும் பரவாயில்லை உயிரோடு வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு பெற்றோரும், என் தாய் தந்தையர் கடைசி நேரத்தில் வாழ்வில் ஆசைப்பட்டதையெல்லாம் அனுபவித்து பெரும் பணக்காரர்களாக சாகாவிட்டாலும் பரவாயில்லை, அவர்கள் இறுதிவரை உயிர் பிரியும் வரை கூட இருப்பதே வரம் என்ற முடிவுக்கு மணமகளும் வந்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *