கொரோனா வைரஸை பரப்பியதற்காக சீனாவிடம் 20 டிரில்லியன் டொலர் நஷ்டஈடு கேட்கும் அமெரிக்கா

சீனாவிடம் 20 டிரில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்கும் அமெரிக்கா!
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்று குற்றம்சாட்டி வரும் நிலையில், இப்போது சீனா மீது அமெரிக்கா தொடர்ந்துள்ள புதிய வழக்கொன்று, உலகெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2019-ன் இறுதியில் சீனாவின் வூகான் மாகாணத்திலிருந்து கிளம்பி, தற்போது உலகெங்கும் பரவியுள்ள கொலவெறி கொரோனா, இன்றைய நிலவரப்படி 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கி விட்டது.

தற்போதுவரை 4.40 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாளுக்குநாள் பாதிப்புகள் அதிகரித்துக்கொண்டே வருவதால், ஒவ்வொரு நாடும் மரண பயத்தில் அலறியபடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
வல்லரசு நாடான அமெரிக்காவையும் கொடூரமாய் தாக்கியுள்ள கொரோனா, அங்கும் 1036 பேரை இதுவரை பலி வாங்கியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸை பரப்பியதற்காக சீனாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் பரவத் தொடங்கிய சீனாவின் வூஹான் நகரில், மிகப் பெரிய வைரலாஜி ஆய்வு மையம் ஒன்று உள்ளது.
கொரோனா எனும் உயிரி ஆயுதம், இந்த மையத்திலிருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா வலுவாய் சந்தேகிப்பதால் இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது

அமெரிக்க செனட்டர் லேரி கிளேமேன் என்பவரும், வாஷிங்டனைச் சேர்ந்த ப்ரீடம் வாட்ச் வழக்கறிஞர்கள் குழுவும் இணைந்து, டெக்சாஸ் மாகாண நீதிமன்றத்தில், வழக்கு தொடர்பான மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில்,

“கொரோனா வைரஸ் எனும் ஒரு உயிரி ஆயுதத்தை (பயாலஜிக்கல் வெப்பன்), உலகின் பொதுச்சட்டத்தை மீறி சீனா உருவாக்கி பரப்பியுள்ளது.
ஒரு மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு எளிதாக தொற்றும்படி, இந்த உயிரி ஆயுதத்தைச் சீனா வடிவமைத்துள்ளது.

மிகவும் ஆபத்தான இந்த வைரசால், உலகில் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 25,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
எனவே அமெரிக்காவுக்கு 20 டிரில்லியன் டாலர்களை சீனா நஷ்ட ஈடாக தர வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ வீரர்கள்தான் கொரோனா வைரஸை வூகானில் பரப்பினர்”— இது அமெரிக்கா மீது சீனா ஏற்கனவே சாட்டியிருந்த குற்றச்சாட்டு..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *