இலங்கையில் இரண்டு வாரங்களில் 20000 பேரை தாக்க இருக்கும் கொரோனா வைரஸ்?

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்துக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இரண்டு வாரங்களில் 20 ஆயிரமாக அதிகரிக்கும் வாய்ப்புக்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

உரிய தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என மருத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பண்ணையில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே மருத்துவர்களால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

“உலகளாவிய ரீதியில் பெரும் அச்சுறுத்தலுக்குரிய விடயமாக கொரோனா தொற்று மாறியுள்ளது. இலங்கையிலும் கொரோனா தொற்றுக்கு இலக்கான 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் கொரோனா தொற்று பரவும் வீதம் தொடர்பான வரைபு உலகின் ஏனைய நாடுகளில் பரவும் வீதம் தொடர்பான வரைபுடன் அச்சொட்டாக ஒத்துப் போகின்றது.

இப்படியே சென்றால் இன்னும் இரண்டு வாரங்களில் இலங்கையில் 20 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காவார்கள். அவ்வாறு நடக்கக் கூடாது என்பதுதான் எங்களின் விருப்பம்.
உரிய தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இந்த நிலைமை நிச்சயம் ஏற்படும்” என்று மருத்துவர்கள் அந்தக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *