கொரோனா வைரஸால் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் தடை ஏற்படும் அபாயம்

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உலகம் எங்கும் மில்லியன் கணக்கான மக்கள் வீட்டில் தங்கி இருக்கிறார்கள். இதனால் இவர்கள் ஒரே நேரத்தில் அதிகமாக இன்ரர் நெட்டை பாவிப்பதால், சேவை வழங்குனர்களால் சமாளிக்க முடியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பல நாடுகளில், இன்ரர் நெட் சேவை தடைப்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மக்கள் அதிகமாக மோபைல் போனை பாவிக்க ஆரம்பித்ததன் காரணமாக, ஐரோப்பிய நாடுகளில் நேற்றைய தினமும், நேற்று முன் தினமும் தடைப்பட்டது யாவரும் அறிந்ததே.

இன் நிலையில் வீட்டில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள், ஒரே நேரத்தில் மின்சாரத்தை அதிகமாக பாவிக்க. ரிரான்ஸ் போமர்கள், வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் மின்சார வேசை வழங்குனர்கள் தெரிவித்து மேலும் அச்சத்தை கிளப்பியுள்ளார்கள். இது இவ்வாறு இருக்க, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ள நெட்-பிள்ஸ் நிறுவனத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒரு கோரிக்கையை சற்று முன்னர் விடுத்துள்ளது. அது என்னவென்றால், நெட்-பிலிக்ஸ் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் HD இல் படங்களை பார்ப்பதால், ஒட்டுமொத்த ஐரோப்பிய இன்ரர் நெட் வேகம் வெகுவாக பாதிக்கபடுவதால்.
HD சேவையை உடனே நெட்-பிலிக்ஸ் நிறுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில இடங்கள் இதுவரை லாக் டவுன் ஆகவில்லை. ஆனால் வரும் சனிக் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை லாக் டவுன் ஆகும் நிலை தோன்றலாம். அப்படி என்றால் மேலும் பல மில்லியன் கணக்கான மக்கள் வீட்டில் உற்கார்ந்து இன்ரர் நெட்டை நோண்ட ஆரம்பிக்க. அதன் வேகம் வெகுவாக பாதிக்கப்படும். சில வேளைகளில் சேவைகள் தடைப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *