திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு கோயில் தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. திருமலை திருப்பதிக்கு வந்த வட இந்திய பக்தருக்கு கரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டதால், திருமலைக்குச் செல்ல பக்தர்களுக்கு தேவஸ்தானம் அனுமதி மறுத்துள்ளது. மேலும் திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைபாதை, அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மார்கங்கள் அனைத்தையும் தேவஸ்தானம் மூடியுள்ளது.

திருப்பதி அலிபிரி சோதனைச்சாவடியில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள் திருமலைக்கு செல்லும் பக்தர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். திருமலையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறித்து  ஆந்திர அரசிடம் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அதில் ஆகம விதிக்கு புறம்பாக இல்லாதவாறு முடிவு மேற்கொள்ளும்படி ஆந்திர அரசும் தெரிவித்தது. கோயிலை மூடாமல் அர்ச்சகர்கள் வழக்கம்போல் பூஜைகளை மேற்கொள்வர்.

ஒரு வாரத்திற்கு பிறகு நிலைமையை பொருத்து முடிவு எடுக்கப்படும் என செயல் அலுவலர் அணில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். 47,957 பக்தர்கள் தரிசனத்திற்கான டிக்கெட் பெற்றுள்ளனர். 29,536 பேர் தற்போது தரிசனம் செய்துள்ளனர். 17,401 தரிசனம் செய்ய உள்ளனர், அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி, திருச்சானூர் பத்மாவதி தயார் கோயில், கோதண்டராம சுவாமி கோயிலும் பக்தர்கள் அனுமதி நிறுத்தப்படுகிறது.

100 வருடங்களில் இதுவே முதல்முறை

கடந்த 100 வருடங்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தற்போது வரை திருப்பதி மலையில் இருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே ஏழுமலையான் தரிசன அனுமதி அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி மட்டுமல்லாமல் ஆந்திராவில் உள்ள அனைத்து கோவில்களிலும் தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கும் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *