ஜப்பானில் தயாரித்த கொரோனா மருந்தால் நோயாளிகள் குணமடைவதாக சீனா அறிவிப்பு

ஜப்பானில்  தயாராகும் மருந்தால் கொரோனா நோயாளிகள் குணமடைந்து வருவதாக சீனா அறிவித்துள்ளது
ஜப்பானில் தயாராகி அங்கிருந்து  இறக்குமதியாகும்  Favipiravir என்ற மருந்து
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8  ஆயிரத்தை தாண்டி உள்ளது.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்தைத் தாண்டியது. இத்தாலியில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில்  கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை‌ 51 ஆக உள்ளது.
இந்நிலையில், ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *