மனைவி பயணியாகவும் கணவன் சடலமாகவும் விமானத்தில் பயணம் செய்த தம்பதியினர்

கண்ணூர் சுழலி குன்னம்புரம் அருகில் புதியபுரத்தை சேர்ந்தவர் முகமது ஷஹீர்… ஒமானில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 30 வயதான ஷஹீருக்கு ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற, மனைவி ஷிஃபானாவையும் ஒமானுக்கு கூடவே அழைத்துச் சென்றார்…
இனிமையான மகிழ்ச்சியாக கழிந்த இல்லற வாழ்க்கையில் ஷிஃபானா தற்போது மூன்று மாதம் கர்ப்பிணி…

ஷஹீருக்கு நண்பர்களுடன் இணைந்து விளையாடும் பழக்கம் உள்ளதால், வழக்கம் போல நேற்று காலையில் மனைவியிடம் கூறிவிட்டு மைதானத்துக்கு சென்றார்..
நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஷஹீர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல நெஞ்சுவவி காரணமாக மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

மூன்று மாத கர்ப்பிணியான ஷிஃபானாவிடம் ஷஹீர் மரணமடைந்த விபரத்தை உடனடியாக சொல்வதை தவிர்த்த நண்பர்கள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும், பத்து நாட்கள் யாரும் பார்க்க முடியாது என்பதால் ஷிஃபானாவை ஆறுதல்படுத்தி இரவு விமானத்தில் ஊருக்கு அனுப்பி வைக்கப்போவதாக கூறி தயார் செய்தனர்..
கூடவே மற்றொரு குழுவினர் மருத்துவமனை சான்றிதழ், தூதரக நடைமுறைகளை விரைந்து முடித்து ஜனாசாவை ஊருக்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளை செய்தனர்…

நேற்றிரவு ஒமானில் இருந்து கண்ணூர் புறப்பட்ட விமானத்தில் ஷிஃபானா சாதாரணமாக இருக்கையில் அமர்ந்து பயணிக்க, அதே விமானத்தில் கணவர் ஷஹீர் ஜனாசாவாக கார்கோ அறையில் கிடத்தப்பட்டிருந்தார்…
மூன்று மணி நேர விமான பயணம் முடிந்து கண்ணூர் விமான நிலையத்தில் திரண்டிருந்த உறவுகளின் கூட்டத்தை பார்த்த ஷிஃபானாவுக்கு ஒன்றும் புரியவில்லை…
சிறிது நேரம் கழித்து ஆம்புலன்சில் ஏற்றும் ஜனாசா தனது ஆசை கணவர் ஷஹீர் என்பது தெரிந்து கதறியழுதது அங்கு திரண்டிருந்தவர்களை கலங்க வைத்தது….
யா அல்லாஹ் !!
அந்த சகோதரிக்கு பொறுமையை வழங்குவாயாக.. இழப்பை தாங்கும் சக்தியை வழங்குவாயாக.
மரணித்த ஷஹீருக்கு உயர்ந்த சுவனத்தை அருள்வாயாக…
Colachel Azheem

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *