கொரோனா வைரஸை காட்டி சமூக ஊடகங்களை முடக்காதீர்!

கொரோனா’ வைரஸ் விவகாரத்தை அடிப்படையாகக்கொண்டு சமூக ஊடகங்களை முடக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கக்கூடாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் சின்னமான ‘தொலைபேசியை’ மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு நேற்றிரவு கொழும்பில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பின்னர் , ” ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவிருந்த நிலையிலேயே ‘கொரோனா’ வைரஸை காரணம்காட்டி பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என கூறப்படுகின்றது.

இந்நிலையில் போலி தகவல்கள் பரப்படுகின்றன என கூறி சமூகவலைத்தளங்களை முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறு நடந்தால் எப்படி பிரசாரத்தை முன்னெடுப்பீர்கள்” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

” ஊடக அடக்குமுறையை நாம் என்றும் அனுமதித்தது கிடையாது. எனவே, கொரோனாவை காரணம்காட்டி சமூகவலைத்தளங்கள் முடக்கப்படுமானால் அதனை நாம் கடுமையாக எதிர்ப்போம்.

அதேபோல் பொறுப்புடனும், பொதுநலன்கருதியும் செயற்படுமாறு ஊடகங்களிடம் கேட்டுக்கொள்வதுடன், உண்மையான தகவல்களை உறுதிப்படுத்தி அவற்றை மக்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.” என்றும் சஜித் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *