இலங்கையில் இருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவா் இன்று காலை அங்கொடையில் உள்ள தேசிய தொற்று நோயியல் நிறுவன (National Institute of Infectious Diseases) வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

கந்தக்காடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவா் மற்றும் சேமாவதிக்கு யாத்திரை சென்ற மற்றுமொரு நபர் ஆகியோரோ தொற்று அறிகுறிகளுடன் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கொடைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அங்கொடை வைத்தியசாலைப் பணிப்பாளா் தெரிவித்துள்ளார்.

இவா்கள் இருவரும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனா்.

அவா்களின் இரத்த மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தப் பரிசோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே அவா்கள் இருவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரா? என்பது குறித்த உறுதியான தகவல் தெரியவரும்.

இதேவளை, இலங்கையில் இதுவரை 17 வெளிநாட்டவா்கள் மற்றும் நான்கு இலங்கையா்கள் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *