கொரோனா வைரஸ் அதிகரித்தால் அவசர கால நிலை பிரகடனம்?

பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று தாக்கத்தினை கையாளும் வழிமுறைகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்குத்த தேவையான விழிப்புணர்வு அறிவுறுத்தல்களை அனைத்து நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்குமாறு விசேட ஆலோசனை வழங்கிய பிரதமர்,
குறித்த வைரஸ் தொற்றுக் காரணமாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம் தொடர்பாகவும் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால் அந்தச் சூழ்நிலையை கையாளுதல் தொடர்பாகவும் தெளிப்படுத்தினார்.
அவசரகால நிலை அறிவிக்கப்படுமாயின் சுகாதாரமான முகக் கவசம் மற்றும் சுகாதார பொருட்களின் உற்பத்திகளை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்