கொரோனா வைரஸ் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் Batticaloa campus

தென் கொரியா மற்றும் இத்தாலியிலிருந்து பயணிகளை ஏற்றிய இரண்டு விமானங்கள் இன்று (10) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.
இரண்டு விமானங்களிலும் நாட்டை வந்தடைந்த 181 பேரை மட்டக்களப்பு Batticaloa Campus இல் கண்காணிப்பிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டை வந்தடைந்தவர்களில் இலங்கை பிரஜைகள் 179 பேரும் தென் கொரிய பிரஜைகள் இருவரும் அடங்குவதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமைநேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இத்தாலியிலிருந்து 15 பயணிகளை ஏற்றிய விமானமொன்று இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.
அத்துடன், 166 பயணிகளை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை தென் கொரியாவிலிருந்து நாட்டை வந்தடைந்திருந்தது.