இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு கட்டார் நாட்டிற்கு வரத் தடை

இலங்கை உட்பட 14 நாடுகளுக்கு பயணத் தடை விதிக்க கட்டார் தீர்மானித்துள்ளது. மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் இந்த தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதன் அச்சம் காரணமாக இலங்கை உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் கட்டார் செல்வதற்கு அந் நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.
கட்டாரில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமையினால் அத்தியாவசிய வெளிநாட்டுப் பயணங்களை தவிர ஏனைய அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறும் கட்டார் நாட்டு பிரஜைகளிடம் கட்டார் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்டார் அரசாங்கம் பயணத்தடை விதித்துள்ள நாடுகள்
01. இலங்கை
02. இந்தியா
03. பாகிஸ்தான்
04. பங்களாதேஷ்
05. நேபாளம்
06. சிரியா
07. எகிப்து
08. லெபனான்
09. ஈரான்
10. ஈராக்
11. இத்தாலி
12. சீனா
13. பிலிப்பைன்ஸ்
14. தென்கொரியா
15. தாய்லாந்து