10 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டு சீனா

10 நாடுகளின் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்ட சீனா.!
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் 10 முன்னணி நாடுகளின் வரிசையில் இருந்து. 2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் சீனா முதல் முறையாக வெளியேற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் சீன சுற்றுலாப் பயணிகளின் வருகை, 92.5 வீதத்தினால், (28,039) குறைந்துள்ளது.
சிறிலங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளை அனுப்பும் நாடுகளின் பட்டியலில் சீனா மூன்றாவது இடத்தை வகித்து வந்தது.
2012ஆம் ஆண்டுக்குப் பின்னர், சீனா முதல் முறையாக முதல் 10 நாடுகளில் இடம்பெறவில்லை.