சீனாவில் கொரோனா நோயாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த ஓட்டல் இடிந்து விழுந்ததில் 4 பேர் பலி

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டு இருந்த ஓட்டல் இடிந்து விழுந்து 4 பேர் உயிரிழந்தனர். சீனாவில் ஹூபெய் மாகாணம் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் 31 மாகாணங்களுக்கு வேகமாக பரவியது. இந்த வைரசால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் கூடிக்கொண்டே சென்றது. சில நாட்களுக்கு முன்பு பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியது. நேற்று 28 பேர் கொரோனா வைரசுக்கு இறந்தனர். இதனால் சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 70 ஆக உயர்ந்தது.

நேற்று புதிதாக 99 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,696 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கிழக்கு சீனா பெய்ஜிங்கில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக ஹோட்டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு அதில், பலர் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த ஓட்டலில் 80 அறைகள் உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.  71 பேர் சிக்கி உள்ளனர்.  அவர்களில் 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓட்டல் உரிமையாளரை கைது செய்துள்ளனர். இதன்பின் மீட்பு பணியில் 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தேடுதல் மற்றும் மீட்பு பணியினர் மற்றும் மீட்பு பணிகளுக்காக 7 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *