போதைப் பொருள் பாவனைக்காக 3000 ரூபா வுக்கு காதலியை விற்ற காதலன்

ஹெரோயின் பயன்படுத்துவதற்காக தனது 18 வயது காதலியை பணத்திற்காக விற்றதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள திருமணமான காதலன் மீது நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கட்டானாவின் கலுவாரிப்புவவின் திசகாவட்டேவில் வசிக்கும் 40 வயதுடைய காதலன், 18 வயதான தனது காதலியை பணத்திற்காக விற்பனை செய்துள்ளார்.  ஜூலை 2016 முதல் ஒக்டோபர் 2016 வரை அந்த யுவதி விற்பனை செய்யப்பட்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக 40 வயதுடைய ஒருவரை சந்தித்து, காதல் வசப்பட்டுள்ளார் 18 வயதான யுவதி. அப்போது, அந்த நபர் திருமணம் செய்து, குழந்தைகள் இருப்பதை மறைத்துள்ளார். அவர் போதைக்கு அடிமையானவர் என்பதையும் யுவதி அறிந்திருக்கவில்லை.
போதைப்பொருள் பாவனைக்கு பணம் தேவைப்பட்டபோது, நபரொரவரிடம் 3,000 ரூபாய் வசூலித்துக் கொண்டு, அவரிடம் தனது காதலியை ஒப்படைத்துள்ளார்.
யுவதி அதற்கு மறுத்தபோது, அவரை மிருகத்தனமாக தாக்கியுள்ளார். அச்சமடைந்த யுவதி அதற்கு இணங்கினார். 2016 ஜூலை தொடக்கம் ஒக்ரோபர் வரை இந்த வழக்கம் நீடித்தது.
இந்த கொடூரத்தை சகித்துக் கொள்ள முடியாத யுவதி, ஆசாமியின் பிடியிலிருந்து தப்பியோடி வந்து, கட்டான பொலிஸ் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் அளித்த முறைப்பாட்டின் படி, காதலன் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *