கொரோனா வைரஸ் அமெரிக்காவின் உயிரியல் தாக்குதல்

கொரோனா வைரஸ் அமெரிக்காவின் உயிரியல் தாக்குதல் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) தலைவர் கூறியுள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
ஈரானில் கொரோனா வைரஸிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது, 3,513 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என ஈரானின் சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பாக கருத்து தெரிவித்த ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவர், கொரோனா வைரஸ் அமெரிக்க உயிரியல் தாக்குதலின் விளைவாக இருக்கலாம்.
அது சீனாவில் தொடங்கி, பின்னர் ஈரானுக்கு பரவியது, பின்னர் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது என சர்ச்சையாக தெரிவித்துள்ளார்.
அதேசமயம் கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிவிட்டதாக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி நேற்று அறிவித்தது நினைவுக்கூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *