அமெரிக்காவை ஆக்கிரமித்துள்ள கொரோனா வைரஸ்

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,943.ல் இருந்து 2,981- ஆக அதிகரித்துள்ளது. இதே போல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,151-ல் இருந்து 80,27 ஆக உயர்ந்துள்ளது. சீனாவை அடுத்து தென்கொரியாவில் கொரோனா பாதிப்பு 5,328 பேருக்கும், இத்தாலியில் 2,502 பேருக்கும் பரவியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 100 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பதும் உறுதியாகி உள்ளது.

சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 70 நாடுகளில் இந்த வைரஸ் பாதித்துள்ளது. இது, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில், வுகானில் இருந்து திரும்பிய 2 மருத்துவ மாணவர்கள் உட்பட கேரளாவைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினர்.

இதனால், கொரோனா அச்சம் விலகிய நிலையில், இத்தாலியில் இருந்து வந்த டெல்லி மயூர் விஹார் பகுதியை சேர்ந்த 45 வயது நபருக்கும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒருவருக்கும், துபாயிலிருந்து வந்த ஐதாராபாத்தை சேர்ந்த ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதிபடுத்தப்பட்டது. இந்நிலையில், வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட டெல்லி நபருடன் தொடர்பு கொண்ட ஆக்ராவை சேர்ந்த 6 பேருக்கும் வைரஸ் தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் அவரது குடும்பத்தினரும் அடங்குவர். இது பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *