மஹிந்த மைத்திரி சொற்போர் ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கழுகு தாக்குதல் பற்றிய கூற்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதில் அளித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், நல்லாட்சி அரசங்கத்தின் ஆட்சியில் சிலர் கழுகு போல மாறுவதற்கு முயற்சி செய்தார்கள் என்று கூறியுள்ளார்.
அதனால் மக்களே பாதிக்கப்பட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.