கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பம்

ஐதராபாத் ஹஸ்தினாபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீப்குமார்(36). சாப்ட்வேர் என்ஜீனியரான வேலை பார்க்கும் இவரது மனைவி சுவாதி. குறித்த தம்பதிகளுக்கு 6 மற்று ஒன்றரை வயதில் இரண்டு மகன்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதீப்குமாருக்கு சொந்தமாக நிறுவனம் ஒன்றை தொடங்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டதால் சிலரிடம் ரூ.22லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் நிறுவனம் தொடங்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தினை திருப்பி கேட்டுத் தொந்தரவு செய்ததால், நாளுக்கு நாள் வேதனை அதிகமாகிய நிலையில் மனைவி மற்றும் மகன்களுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.

அப்பொழுது சுவாதியின் பெற்றோர் போனில் தொடர்பு கொண்ட போது யாரும் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உள்ளபக்கமாக பூட்டப்பட்டிருந்ததையடுத்து, பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொலிசார் வந்து பார்க்கையில், அங்கு 4 பேரும் விஷமருந்து உயிரற்று காணப்பட்டுள்ளனர். பின்பு பொலிசாரின் கையில் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் நான் சொந்தமாக நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டு, அதிகமாக கடன் வாங்கிவிட்டேன். அதை அடைக்க முடியாததால் இந்த முடிவை எடுக்கிறேன். என்னை மன்னித்து விடுங்கள் என பிரதீப்குமார் எழுதி வைத்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *