இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைப்பு!

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைப்பு! உறுதிப்படுத்தியது அரசாங்கம்!! ஏப்ரல் 25 தேர்தல்!!
எட்டாவது பாராளுமன்றத்தைக் கலைக்கும் விசேட அரசிதழை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நள்ளிரவு வெளியிடவுள்ளார் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம், பாராளுமன்றத்தின் முதல் அமர்வு நடைபெற்று, நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் அதனை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது.
இந்தகால எல்லை மார்ச் முதலாம் திகதியுடன் முடிவடைந்த நிலையிலேயே இன்றி நள்ளிரவு பாராளுமன்றத்தைக் கலைக்கும் அரசிதழ் வெளியிடப்படவுள்ளது.
வேட்புமனு தாக்கலுக்கான திகதி, தேர்தல் திகதி, அடுத்த பாராளுமன்றம் கூடும் நாள் ஆகிய தகவல்கள் அரசிதழில் உள்ளடக்கப்படும்.
இதன்படி ஏப்ரல் 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்படவுள்ளது