மருமகள் காதலனுடன் உல்லாசம்!கண்டித்த மாமியார் கொலை

மருமகள் கள்ளக்காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மாமியரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள பேடராயனபுரா என்ற பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும், சவுந்தர்யா என்ற பெண்ணிற்கும் இடையே திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த சில மாதங்களிலேயே, நவீன் என்ற நபருடன் சவுந்தர்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 19-ம் தேதி அன்று, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், சவுந்தர்யா, நவீனுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்கு வந்த சவுந்தர்யாவின் மாமியார் வந்தார். அப்போது, மருமகள் வேறொருவருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மேலும், இதுதொடர்பாக தனது மகனிடம் கூறுவதாகவும் அவர் மிரட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து ராஜம்மாவை கொடூரமாக கொலை செய்தனர். பின்னர், நகைக்காக கொள்ளையர்கள் கொலை செய்தது போல நாடகமாடினர்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் விசாரணையில் மருமகள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்தனர். இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியதில் மாமியாரை மருமகள் மற்றும் கள்ளக்காதலன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *