வெட்கம் மானம் இல்லாதவர் மைத்திரி! பொதுத் தேர்தலில் நிச்சயமாக அவரை தோற்கடிப்பேன்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிச்சயமாக தோற்கடிப்பேன் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க கூறியுள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில்
தாமரை மொட்டு’ கூட்டணியின் தவிசாளராக மைத்திரிபால நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச விளக்கமளித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 15 இலட்ச வாக்குகள்கூட இல்லை .அதுதான் உண்மை. கூடுதல் பட்சம் இரண்டு இலட்சம் வாக்குகள் இருக்கலாம்.
சுதந்திரக் கட்சிக்காரர்கள் எல்லோரும் ‘தாமரை மொட்டு’க்கு வந்துவிட்டனர் .வெட்கம், மானம் இருந்தால் மைத்திரிபால சிறிசேன தாமரை மொட்டில் போட்டியிடுவாரா என்பதை நாங்கள் யோசிக்க வேண்டும்.
அவருக்குப் பதவி இல்லாமல் இருக்க முடியாது. மக்கள் மீதுள்ள அன்பினால் அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அமைச்சுப் பதவிகளை எடுத்துக்கொள்பவர்கள் யார் என்பதை மக்கள் பார்க்க வேண்டும். அவர்களைத் தோற்கடிக்க வேண்டும்.
மீளெழும் பொலனறுவை என்ற திட்டத்தை அமுல்படுத்தி அதன்மூலம் பெரும் நிதி மோசடி செய்துள்ளார் மைத்திரி. ஆறாயிரத்து முன்னூறு கோடி ரூபாவை இங்கு செலவளித்துள்ளதாகக் கூறும் அவர் அதில் நாலாயிரம் கோடி ரூபாவுக்கு மேல் கொள்ளையடித்துள்ளார். நான் இதனைப் பொறுப்புடன் கூறுகின்றேன். இது குறித்து விசாரணை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன்” – என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *