அவுஸ்திரேலிய சகலதுறை வீரரை கரம்பிடிக்கும் தமிழகப் பெண்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல், மெல்போர்னில் வாழ்ந்து வரும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வினி ராமன் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார்.
பிப்ரவரி 26 அன்று தன் நீண்ட நாள் காதலி வினி ராமனுக்கு மோதிரம் அணிவித்து அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை அடுத்து பலரும் மேக்ஸ்வெல்லுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
கிளென் மேக்ஸ்வெல் அவுஸ்திரேலிய அணியின் சிறந்த சகலதுறை வீரராக கருதப்படுபவர். ஐபிஎல் தொடரில் அவருக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது.
கடந்த 2020 ஐபிஎல் ஏலத்தில் மேக்ஸ்வெல் 10 கோடிக்கும் அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டார். மன அழுத்தம் இடையே சில மாதங்கள் அவர் மன அழுத்தம் காரணமாக கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கி இருந்தார்.
அது பெரிய அளவில் பேசப்பட்டது. மன அழுத்தம் பற்றி வெளிப்படையாக பேசிய முதல் கிரிக்கெட் வீரர் என பலராலும் பாராட்டப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *