எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் காலமானார்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் தனது 91 ஆவது வயதில் இன்று காலமானார்.

எகிப்தில் 2011 ஆம் ஆண்டில் அரபு வசந்தப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னதாக மூன்று தசாப்தங்கள் ஜனாதிபதியாக ஹொஸ்னி முபாரக் பதவி வகித்திருந்தார்.

இந்த மக்கள் புரட்சியையடுத்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொல்ல உடந்தையாக இருந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

18 நாட்கள் எகிப்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, 239 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஹொஸ்னி முபாரக்கிற்கு 2012 ஆம் ஆண்டில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும், 2017-இல் தண்டனை இரத்து செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் கெய்ரோவில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முபாரக்கிற்கு ஜனவரி பிற்பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர் தீவிர சிகிச்சையில் இருந்ததாக அவரது மகன் அலா கடந்த சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *