சாக இருந்த சிறுவனுக்கு கிடைத்த இலட்சக்கணக்கான டொலர்கள்

அவுஸ்திரேலியாவை சேர்ந்த குவேடன் பெயில்ஸ் தான் சாக விரும்புவதாக தாயிடம் கதறி அழும் வீடியோ வெளியாகி உலகையே உலுக்கியது.

அவுஸ்திரேலியாவின் அபோர்ஜினல் இனத்தை சேர்ந்தவர்கள் குவேடன் பெயில்ஸ் குடும்பத்தினர்.

மிகவும் பூர்வகுடி இனத்தை சேர்ந்த பெயில்ஸ் தனது மகன் கதறி அழும் வீடியோவை பகிர்ந்திருந்தார்.

அதில், குள்ளமாக (Dwarf) இருக்கும் அந்த சிறுவன் தன் உருவத்தால் கிண்டலுக்கு உள்ளாவதாகவும், வாழப்பிடிக்கவில்லை என்றும் அந்த காணொளியில் கூறி அழுது இருந்தான்.

மேலும் தினமும் என் மகன் இப்படியான கிண்டல்களையும், கேலியையும் எதிர்கொள்கிறது, உங்களது பிள்ளைகளுக்கு, நண்பர்களுக்கு தயதுசெய்து இதுகுறித்து சொல்லிக் கொடுங்கள் என உருக்கமாக பேசியிருந்தார்.

இந்த வீடியோ வைரலாக பலரும் குவேடன் பெயில்ஸ்க்கு ஆதரவாக கமெண்டுகளை தெறிக்கவிட்டனர்.

உனக்காக நாங்கள் இருக்கிறோம் என உலகமே கைகொடுத்தது, இச்சூழலில் குவேடனை அமெரிக்காவின் டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் இறங்கினார் அமெரிக்க நடிகர் பிராட் வில்லியம்ஸ்.

பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு திரட்டுவதற்கு இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் ஏறத்தாாழ மூன்று லட்சம் அமெரிக்க டொலர்கள் குவிந்துள்ளன.

இதுமட்டுமா ரக்பி அணிக்கு தலைமை தாங்கியும் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளார் குவேடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *