மனைவியின் பிறந்த தினத்தில் கணவன் உயிரிழப்பு! மறுநாள் குழந்தை பிரசவம்

மனைவியின் பிறந்தாளில் உடல் நிலை சரியில்லாமல் கணவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நாட்டில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வரும் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சார்ந்த தம்பதி பிரசாந்த் கொம்மிரெட்டி(38) மற்றும் திவ்யா. இவர்களுக்கு மூன்று வயதுடைய பெண் குழந்தை உள்ளது.
பிரசாந்த் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், கடந்த நாட்களுக்கு முன் அலுவலகத்தில் தலை வலி மற்றும் கழுத்து வலி இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்ட சக ஊழியர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பிரசாந்த் பக்கவாதத்தால் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். இந்த நாளில் இவரது மனைவியின் பிறந்தநாளும் அமைந்துள்ளது. தனது கணவரின் வருகைக்காக காத்திருந்த மனைவிக்கு சோக செய்தி மட்டுமே கிடைத்துள்ளது.
மனைவி திவ்யாவுக்கு நிறைமாத கர்ப்பிணியாக இருந்து எப்போதும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையும் இதே நேரத்தில் ஏற்பட, கணவரை இழந்த மறுநாளே அழகிய பெண் குழந்தை பிரசவத்தில் பிறந்துள்ளது.
இந்த சோகத்திற்கு மத்தியில் இவர்களுக்கு உதவி செய்யும் நிலையில், பிரசாந்த்தோடு பணியாற்றி வந்த ஊழியர் இணையத்தின் மூலமாக குடும்பத்திற்கு நிதி திரட்டியுள்ளார். இப்போது வரை ரூ.2.7 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.