இலங்கையில் 50 பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள்?

துருக்கியில் செயல்படும் ஃபட்டா பயங்கரவாத அமைப்பின் 50 உறுப்பினர்கள் இலங்கைக்கு வந்துள்ளதாக துருக்கி அரசாங்கம் அனுப்பிய எச்சரிக்கையை, கடந்த அரசு எந்த கவனமும் செலுத்தவில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் மேலதிக செயலாளர் மாலிகா ஸ்ரீமதி பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கும் போது, நேற்று (21) இதனை தெரிவித்தார்.
ஓகஸ்ட் 24, 2016 அன்று துருக்கிய தூதரகம் அனுப்பிய அந்த கடிதம், “அதிர்ச்சியூட்டும்” ஒன்று என்று கூறியுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள சிறப்பு அலுவலகத்தில், ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக டி சில்வா தலைமையில் விசாரணை அமர்வுகள் நேற்று நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் மூத்த செயலாளர் சமன் பிரசன்ன கிரிவட்டுடுவேகே மற்றும் வெளிவிவகார அமைச்சின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் துணை இயக்குநர் திருமதி மகேஷ பாரதி ஜெயவர்தன ஆகியோர் ஜனாதிபதி ஆணையத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
துருக்கிய அரசாங்கம் இலங்கைக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக அவர்கள் மூவரிடமிருந்தும் ஜனாதிபதி ஆணைக்குழு விரிவான சாட்சியங்களை பதிவு செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *