உலகில் சிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் பேராதனைப் பல்கலைக்கழகம்

உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் பேராதனைப் பல்கலைக்கழகம் உள்வாங்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் உயர் கல்வி நிறுவனம் வெளியிட்ட புதிய தரப்படுத்தலில் பேராதனை இடம்பிடித்துள்ளது. இந்த தரப்படுத்தலில் இலங்கையில் சிறந்த பல்கலைக்கழகமாக இது பெயரிடப்பட்டுள்ளது.
உலகில் உள்ள 30 ஆயிரம் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கி டைம்ஸ் கல்வி நிறுவனம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 5 பிரிவுகளின் கீழ் இதற்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
கற்பித்தலுக்கான சூழல் மற்றும் கற்பித்தல் ஆய்வுகளின் தாக்கம், பணியாளர் சபை விஞ்ஞானம் மற்றும் ஆய்வுக்காக உள்ள சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுதல் மற்றும் வர்த்தக சந்தைப் பெறுமதி உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.
இந்த பட்டியலில் இங்கிலாந்தின் ஒக்ஸ்பேர்ட் பல்கலைகழகம் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் கேம்பிரிட்ஸ், அமெரிக்காவின் ஸ்ரான்ட்போர்ட் ஆகியன அடுத்த இரண்டு இடங்களை பெற்றுள்ளன. முதல் 10 இடங்களையும் இங்கிலாந்து, அமெரிக்க பல்கலைகழகங்களே பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *