இறந்த மகளை கண்முன் மீண்டும் சந்தித்த தாய்

துயரம் என்பது நமது வாழ்வின் ஓர் அங்கம்தான். ஆனால் அதற்காக, ஏற்படும் துயரம் அனைத்தையும் அவ்வளவு எளிதில் கடந்துவிட முடிவதில்லை. அதுவும் ஒரு குழந்தையை இழந்தால் அந்த துயரை என்னவென்று சொல்வது?

ஆனால் தென்கொரியாவில் தனது ஏழு வயது மகளை இழந்த தாய் ஒருவர் மெய்நிகர் உலகம் மூலம் தனது துயரத்தை ஆற்ற முயற்சித்திருக்கிறார்.

குணப்படுத்த முடியாத ரத்தம் தொடர்பான குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது மூன்றாவது மகளான நா நியோனை இழந்துவிட்டார் ஜாங் ஜி சங் என்ற தாய்.

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புக் குழு ஒன்று எட்டு மாதம் முயற்சி செய்து நா நியோனின் முப்பரிமாணத் தோற்றத்தை உருவாக்கியது.

குழந்தை நட்சத்திரம் ஒருவரின் செய்கையை மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி அதன் மூலம் நா நியோனின் அசைவை உருவாக்கினர். அவளின் குரலையும் அதனுடன் உருவாக்கினர்.

தாயும் மகளும் நிஜ வாழ்வில் விளையாடச் சென்று வந்த பூங்கா ஒன்றையும் அவர்கள் வடிவமைத்தனர்.கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது MBClifeஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது MBClife

“மீட்டிங் யூ” (உன்னை சந்திக்கிறேன்) என்ற அந்த ஆவணப்படம், எம்பிசி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது அதை மில்லியன் கணக்கான தென்கொரியர்கள் பார்த்துள்ளனர்.

அதில் மகளும், தாயும் “சேரும்” காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமானது.

செயற்கையாக உருவாக்கப்பட்ட அந்த மகள் தனது தாயிடம் சென்று, அம்மா நீ எங்கே இருந்தாய், என்னைப் பற்றி நினைத்தாயா, என்று கேட்பாள்.

அந்த செயற்கை உருவத்தை அனைத்துக்கொள்ள அந்த தாய் கண்ணீருடன் அடியெடுத்து வைப்பதை அந்த தயாரிப்பு குழுவினர் பார்த்துக் கொண்டிருப்பர்.

அந்த மகளின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் சோகத்தில் அமர்ந்திருப்பர்.

பிரிந்தோரை சந்தித்தல்

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் மகளை சந்தித்த தாய்

இந்த ஆவணப்படம் இறந்துபோன அன்புக்குரியவர்களை மீண்டும் சந்திக்க முடியும் என்பதற்கு பின்னால் உள்ள மனரீதியான தாக்கம் மற்றும் அதற்குபின் உள்ள வாழ்க்கை நியதி குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது.

சிலர் இந்த முயற்சி ஆறுதல் தரும் ஒன்று என்று தெரிவித்தாலும், சிலர், மக்கள் தங்கள் துயரங்களிலிருந்து கடந்து செல்வதை இது தடுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

குழந்தையை இழந்த தாயின் சோகத்தை எம்பிசி தொலைக்காட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

யூ டியூபில் பதியப்பட்ட இந்த காணொளியை 13 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். 19,000 பேர் தங்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *