வுஹான் நகர ஆய்வகத்தில் வைரஸ் உற்பத்தியாகிறது.. 40 வருடம் முன்பே சொன்ன மர்ம நாவல்.. பரபரப்பு

மர்ம நாவல்களில் சகஜம்

பீஜிங்: கொரோனா வைரஸ் தீ போல பரவியதில், சீனாவில் மட்டும், 1700க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். சீன நகரமான வுஹான் இந்த வைரஸின் மையமாக மாறி உள்ளது. கொரோனா வைரஸ், இப்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஆனால் 40 ஆண்டுகளுக்கு முன்பு வுஹான் நகரில் ஆரம்பித்த, வைரஸ் குறித்து, ஒரு புனைக்கதை, நாவல் புத்தகத்தில், தகவல் உள்ளது, உங்களுக்குத் தெரியுமா? 1981ஆம் ஆண்டில் டீன் கூன்ட்ஸ் எழுதிய த்ரில்லர் நாவலான தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் (The Eyes of Darkness), வுஹான் -400 என்ற வைரஸைக் குறிப்பிட்டுள்ளது. நாவலின் கதைப்படி, அந்த வைரஸ் ஒரு ஆய்வகத்தில் ஆயுதமாக உருவாக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசும் கூட பயோ போருக்கான முன்னோட்டம் என்ற ஒரு, கருத்தும் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. இந்த நாவலும் அதேபோன்ற ஒரு வைரஸ், ஆய்வகத்தில் உற்பத்தி செய்வது போல கூறுகிறது. @DarrenPlymouth என்ற டுவிட்டர் பயனர், இந்த நாவல் வரிகளை, சமூக ஊடகங்களின் வழியாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். புத்தகத்தின் அட்டையை வெளியிட்டு, புத்தகத்தின் ஒரு பகுதியையும், அவர் பகிர்ந்து கொண்டார். அந்த நாவலில் வுஹான் -400 என்ற பெயரில் வைரஸ் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், நாவல்கள் அதிலும் கிரைம் நாவல்கள், இதுபோன்ற கற்பனைகளை கலந்து இருப்பது இயல்பானதுதான். வுகான் நகரம், சீனாவின் முக்கிய நகரங்களில் ஒன்று. தொழில்நகரம் ஆகும். பல சர்வதேச தலைவர்கள், அங்கே சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர். பல மாதங்கள் முன்பாக, மாமல்லபுர சந்திப்புக்கு முன்பாக, பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கூட அந்த நகரில் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *