இலங்கையில் ஏன் ஞாயிறு ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது பாதுகாப்பு செயலாளர் விளக்கம்

கடந்த அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகம் ஆகிய வசனங்களை மேன்மைப்படுத்தி, தேசிய பாதுகாப்பு என்ற வசனத்தை தாழ்மைப்படுத்தியமையே இந்த தாக்குதல் நடத்தப்படுவற்கான காரணம் என அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் பொறுப்பு வாய்ந்தவர்கள் அறியாமையும் இந்த தாக்குதல் நடத்தப்படுவதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 290ற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்ததுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததை கமல் குணரத்ன இதன்போது நினைவூட்டினார்.
இலங்கையில் 30 வருடங்கள் இடம்பெற்ற யுத்தம் மற்றும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற அசம்பாவித விடயங்களை இனிவரும் காலங்களில் ஏற்பட தாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என கமல் குணரத்ன உறுதியளித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தில் தான் கடமையாற்றிய காலப் பகுதியில் தனக்கும் இராணுவ தளபதியாக பதவி வகிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாக கமல் குணரத்ன கூறினார்.
இதன்படி, இலங்கை இராணுவத்தில் இராணுவ தளபதியாக கடமையாற்ற பணியாற்றினால் மாத்திரம் போதுமானதாக அமையாது என கூறிய அவர், அதற்கு அதிஷ்டம் இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன், சிங்கள மக்களுக்கு அனைத்து விடயங்களும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் மறந்து விடும் என பிரபாகரன் கூறியிருந்ததாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வூ பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நினைவூட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *