மேயர் பதவிக்கும் அரசியலுக்கும் முடிவு கட்டிய ஆபாச வீடியோக்கள்
ஆபாச காணொளி ஒன்று பிரான்ஸ் ஆளும் அரசின் மேயர் வேட்பாளரின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி உள்ளது. பாரிஸ் நகர மேயர் வேட்பாளராக களம் நின்றார் பெஞ்சமின்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இவர் உடலுறவு கொள்ளும் காட்சி வைரலாக பரவியது. இதனை அடுத்து அவரது அரசியல் வாழ்வு கேள்விக் குறியாகி உள்ளது.
ரஷ்யாவிலிருந்து வந்து பிரான்ஸில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ள பீட்டர் என்பவர் இந்த காணொளியைப் பதிவேற்றியதாக தெரிகிறது. அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பதிவேற்றினேன் என்று கூறுகிறார் அவர். அதே நேரம், தனிப்பட்ட ஒருவரின் வாழ்வையும், அரசியல் வாழ்வையும் குழப்பிக் கொள்ளும் பழக்கம் பிரான்ஸில் இல்லை என ஆளும் அரசு கூறி உள்ளது.