இராணுவ தளபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமெரிக்கா பயணத்தை வர்த்தமானிக்கும் செயல்

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டமை வருத்தமளிக்கும் துரதிர்ஷ்டவசமான நிலைமை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்நின்ற தளபதிகளில் ஒருவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைரின் ட்விட்டர் தளத்தில் இந்த விடயம் பதிவிடப்பட்டுள்ளது.

நாடு என்ற ரீதியில் இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வாவிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவரின் ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *