சஜித்தின் கூட்டணியின் பெயரைச் சுருக்கினால் UNP என்றே வருகின்றது! – ஏற்க வேண்டாம் எனக் கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஐ.தே.க. கடிதம்

சஜித் பிரேமதாச தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணிக்கு ‘சமகி ஜாதிக பலவேகய’ (United National Power – ஐக்கிய தேசிய சக்தி) எனப் பெயரிடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

குறித்த பெயரில் கட்சியொன்று பதிவு செய்யப்படுமானால் அதனை ஏற்க வேண்டாம் எனக் கோரி ஐ.தே.கவின் சட்டச் செயலாளரால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்குக் கடிதம் அனுப்பட்டுள்ளது.

‘United National Power’ என்ற கூட்டணியின் பெயரைச் சுருக்கினால் ‘UNP’ என்றே வரும். ஏற்கனவே ‘United National Party’ (ஐக்கிய தேசியக் கட்சி) பெயரைச் சுருக்கினாலும் அதே சொற்பதம்தான் வருகின்றது.

இதனை அடிப்படையாகக்கொண்டே ஐக்கிய தேசியக் கட்சியால் தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *