சீனாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் அச்சத்தில் உலக நாடுகள்

பீஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா காய்ச்சலால் இதுவரை 1,016 பேர் பலியாகி உள்ளது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42,638 அதிகரித்துள்ளது.

*சீனாவில் கடந்த டிசம்பர் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது தீவிரமடைந்து வருகின்றது. நாள்தோறும் கொரோனா காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

*தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாததால் காய்ச்சலை சரிப்படுத்தும் சிகிச்சை முறைகள் பயனளிக்கவில்லை. இந்நிலையில் கொரோனா காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை நேற்று 1,016ஆக அதிகரித்தது.

*இது தொடர்பாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திங்களன்று மட்டும் கொரோனா பாதித்த 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

*ஹூபெய் மாகாணத்தில் நேற்று மட்டும் 2,097 பேருக்கு புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

*வுகானில், கொரோனா வேகமாக பரவி வருவதால், இன்னும் 10 நாளில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக உயரக்கூடும் என தகவல் கள் வெளியாகி உள்ளன. அதாவது 20ல் ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு  இருக்கும் என்று பீதி தரும் செய்தி வெளியாகி உள்ளது.

*இந்நிலையில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியாக அந்நாட்டிற்கு சிறப்பு மருத்துவக் குழுவை உலக சுகாதார அமைப்பு அனுப்பியுள்ளது.

*இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும் சீன அதிபர் ஸீ ஜின்பிங்  மக்களை சந்தித்து ஆறுதல் கூறி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *